
கோலாலம்பூர், ஏப் 3 – IPIC எனப்படும் அனைத்துலக பெட்ரோலியம் முதலீட்டு நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட தொகை தொடர்பில் 6.6 பில்லியன் ரிங்கிட் நிதியை முறைகேடு செய்திருப்பதாக தமக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை அரசு தரப்பு மீட்டுக்கொள்வதற்கு புதிய மனுவை நஜீப் வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்விருக்கின்றனர். IPIC நிறுவனத்துடனான தனது சட்ட தகராறை அரசாங்கம் தீர்த்துக்கொண்டதை தொடர்ந்து அந்த விவகாரத்தில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என நஜீப்பின் வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா தெரிவித்தார்.
தீர்வு காணப்பட்ட தொகையில் முன்னாள் பிரதமர் எதிர்நோக்கிய குற்றச்சாட்டுடன் தொடர்புபடுத்தப்பட்டதாக அவர் கூறினார். எனவே இந்த மாதமும் அடுத்த மாதமும் நடைபெறும் இந்த வழக்கு விசாரணையை நிறுத்தும்படி நீதிமன்றத்தை தங்களது தரப்பு கேட்டுக்கொண்டுள்ளதாக இன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஷாபி தெரிவித்தார்.