
இந்தியா ஜூலை 11 – கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஒரு ஐ.டி நிறுவனத்தின் தலைவர் (MD) மற்றும் தலைமை செயல் அதிகாரியை (CEO) முன்னாள் ஊழியர் ஒருவர், அலுவலகத்திலேயே வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட அந்த ஐடி நிறுவனத்தின் தலைவராக பனிந்திர சுப்ரமணியன், தலைமை செயல் அதிகாரியாக வினு குமார் செயல்பட்டு வந்தனர்.
நேற்று இருவரும் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த முன்னாள் ஊழியர் பிளிக்ஸ் என்பவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த வாளால் இருவரையும் சரமாரியாக வெட்டினார்.
இதனை பார்த்த மற்ற ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய பிளிக்சை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கொலையாளி பிளிக்ஸ் ஐடி வேலையை விட்டு விலகி தனியே தொழில் நடத்தி வந்துள்ளார். அந்த தொழிலில், சுப்ரமணியன், வினு குமார் தலையிட்டதால் இருவரையும் கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.