
கோலாலம்பூர், மார்ச் 11 – Jana Wibawa திட்டம் தொடர்பில் சிலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது, அரசியல் நோக்கம் கொண்டது என கூறப்படுவதை MACC –மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மறுத்திருக்கின்றது.
தாங்கள் சொந்தமாக சேகரித்த தகவல், ஆதாரங்கள் அடிப்படியிலே ஒரு நபர் மீது விசாரணை அறிக்கை திறக்கப்படும். அதன் பின்னர் மேற்நடவடிக்கைக்காக, முழுமைப் பெற்ற அறிக்கை தேசிய சட்டத் துறையிடம் வழங்கப்படுமென அவ்வாணையம் கூறியது.
இந்த விசாரணையில் யாருடைய தலையீடும் இருக்காது எனவும் அவ்வாணையம் ஓர் அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டது.