Latestமலேசியா

JB, புக்கிட் இண்டாவில் ஆடவரை முகத்தில் குத்திய நபர் கைது; பொறாமையே காரணம் என போலீஸ் தகவல்

இஸ்கண்டார் புத்ரி, ஏப்ரல் 8 – ஜொகூர் இஸ்கண்டார் புத்ரியில் எண்ணெய் நிலையமொன்றில் ஏற்பட்ட சண்டை தொடர்பில் 35 வயது ஆடவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

புக்கிட் இண்டாவில் நிகழ்ந்த அச்சண்டையில் சம்பந்தப்பட்ட 26 வயது இளைஞர் செய்த புகாரை அடுத்து அக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இரு ஆடவர்களும் ஒரு பெண்ணும் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகள் அடங்கியக் காணொலி முன்னதாக facebook-கில் வைரலானது.

பாதிக்கப்பட்டவர், அப்பெண்ணின் கணவர் தன்னைத் தாக்கியதாக போலீஸ் புகாரில் கூறியுள்ளார்.

அவ்விரு ஆடவர்களிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், பொறாமையின் காரணமாகவே அவர்கள் கைகலந்தது தெரிய வந்துள்ளதாக Iskandar Puteri இடைக்கால OCPD Supt Ibrahim Mat Som கூறினார்.

கோத்தா இஸ்கண்டார் நெடுஞ்சாலையில் கைதான அந்நபர், மற்றவருக்கு காயம் விளைவித்தது மற்றும் மிரட்டிய குற்றங்களுக்காக குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவார்.

சந்தேக நபரை விசாரணைக்குத் தடுத்து வைக்க நீதிமன்ற ஆணைப் பெறப்படும் என்றார் அவர்.

பெட்ரோல் நிலையத்தில் வைத்து, ஓர் ஆடவரையும் பெண்ணையும் நபர் ஒருவர் குத்துவதை, வைரலான 46 வினாடி காணொலியில் பார்க்க முடிகிறது.

அவ்வாடவரை சந்தேக நபர் சரமாரியாக முகத்தில் குத்துவதோடு, அப்பெண்ணைக் கன்னத்தில் அறைந்து அவரின் தலைமுடியைப் பிடித்து இழுப்பதை அருகில் மற்றொரு காரில் இருந்தவர்கள் கைப்பேசியில் பதிவுச் செய்ததாகத் தெரிகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!