
அமெரிக்காவின் பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ஜெர்மி ரென்னரின் நிலை கவலைக்கிடமாக உள்ள போதிலும், சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்தில் சிக்கியதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்பத்தார் உடனிருக்க அவருக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, Hawkeye Star பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
மோசமான வானிலையால் விபத்தில் சிக்கிய ஜெர்மி ரென்னர், விமானம் வாயிலாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 2010-ஆம் ஆண்டு, The Hurt Locker திரைப்படத்துக்காக, ஆஸ்கார் விருதுக்காக முன்மொழியப்பட்டதை அடுத்து பிரபலமான ஜெர்மி ரென்னர், பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.