Latestமலேசியா

Jet Ski பந்தயக்காரர் திரங்கானு ஆற்றில் மூழ்கியிருக்கலாமென அச்சம்; மீட்புப் பணிகள் தீவிரம்

குவாலா திரங்கானு, ஆகஸ்ட் -10 – குவாலா திரங்கானுவில் Jet Ski பந்தயத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த 44 வயது ஆடவர் நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Jet Ski நீர் சறுக்குப் பந்தயத்தில் கைத்தேர்ந்தவரான அப்துல்லா மூபின் (Abdullah Mubin)
இஸ்லாமிய நாகரீகப் பூங்கா அருகேயுள்ள திரங்கானு ஆற்றில் வெள்ளிக்கிழமை காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

தாய்லாந்தில் நடைபெறவுள்ள போட்டிக்குத் தயாராகும் பொருட்டு, தனியாக jet ski சோதனையில் ஈடுபட்ட போது திடீரென அவர் ஆற்றில் விழுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் சொன்னார்.

குவாலா திரங்கானு தீயணைப்பு மீட்புத் துறையின் நீர் மீட்புக் குழுவைச் சேர்ந்த நால்வர் உட்பட 12 பேர் சம்பவ இடத்தில் அப்துல்லாவைத் தேடி வருகின்றனர்.

கடல் போலீஸ், அவரின் நண்பர்கள், கிராமத்தினர் உள்ளிட்டோரும் மீட்புப் பணிகளுக்கு உதவி வருகின்றனர்.

2012 தாய்லாந்து மன்னர் கிண்ண Jet Ski போட்டியில் நிபுணர்கள் பிரிவில் சாதனை வைத்திருந்தவர்களில் அப்துல்லா மூபினும் ஒருவராவார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!