கோலாலம்பூர்,மார்ச் 4 – JKMPay எனப்படும் ரொக்க தொகையற்ற திட்டம் குறித்து அதனை பெற்றுக்கொள்பவர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் Rina Harun கூறியிருந்ததை மாற்றுத் திறனாளிகளை பிரதிநிதிக்கும் 11 அரசு சார்பற்ற இயக்கங்கள் மறுத்தன. இது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் Rina மற்றும் மகளிர் குடும்பம், சமூக மேம்பாட்டு துணையமைச்சரும் கலந்துகொள்ளவில்லை என மாற்றுத் திறனாளிகளை பிரதிநிதிக்கும் அந்த அரசு சார்பற்ற இயக்கங்கள் கூறிக்கொண்டன. அமைச்சு ஏற்பாடு செய்த கலந்துரையாடல் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது . அந்த நிகழ்வின்போது குறுகிய கேள்வி மற்றும் அதற்கு பதில் கூறும் அங்கம் மட்டுமே நடைபெற்றது. JKMPay திட்டத்திற்கான எங்களது கேள்விக்கு பதில் அளிக்கப்படவிலையென அந்த அரசு சார்பற்ற இயக்கங்கள் சுட்டிக்காட்டின.
Check Also
Close