கோலாலம்பூர், ஏப்ரல்-28 ஜொகூர் Forest City-யில் Casino சூதாட்ட மையத்தைத் திறப்பதற்கு பேச்சுவார்த்தை நடப்பதாக Bloomberg வெளியிட்ட செய்தி தொடர்பில், facebook-கில் பதிவிட்ட கருத்துக்காக அரசியல் ஆர்வலர் Chegubard கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
தேச நிந்தனைச் சட்டம் மற்றும் தொடர்பு-பல்லூடகச் சட்டத்தின் கீழ் தனது கட்சிக்காரர் விசாரிக்கப்படுவதாக Chegubard-டின் வழக்கறிஞர் உறுதிபடுத்தினார்.
விசாரணைக்காகத் தடுத்து வைக்க இன்று நீதிமன்ற ஆணைப் பெறப்படலாம் என்றும் அவர் கோடி காட்டினார்.
Bloomberg தனது செய்தியில் பெயர் குறிப்பிட்ட அனைத்துத் தரப்பும் இதுவரை அச்செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கெந்திங் நிறுவனத்தின் துணைத் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான Tan Sri Lim Kok Thay, Berjaya Corp Bhd-டின் உரிமையாளர் Tan Sri Vincent Tan ஆகியோரே அவர்களாவர்.
Johor Forest City-யில் Casino-வை அமைப்பது குறித்து அம்மூவரும் கடந்த வாரம் சந்தித்துப் பேசியதாக, Bloomberg கூறியிருந்தது.