
கோலாலம்பூர், ஜன 14 – JPJ – சாலை போக்குவரத்து துறையின் முகப்பிடச் சேவைகளை விரைவுப்படுத்தும் புதிய முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படுமென போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஶ்ரீ அந்தோணி லோக் தெரிவித்தார்.
மக்கள் சாலை போக்குவரத்து துறைக்கு செல்லாமலே , சாலை வரி, வாகன சான்றிதழ், வாகனமோட்டும் லைசென்ஸ் போன்றவற்றை செயலி ஒன்றின் மூலமாக புதுப்பிக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்படலாமென அவர் கூறினார்.
அது குறித்த விபரங்கள் சீன பெருநாளுக்குப் பின்னர் அறிவிக்கப்படுமென அந்தோணி லோக் குறிப்பிட்டார்.