
கோலாத் திரெங்கானு, ஜூன் 1 – உலு திரெங்கானு மாவட்டத்திலுள்ள Tasik Kenyir ஏரி இனி தேசிய Geopark அல்லது புவி பூங்கா என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு அது Kenyir Geopark என விளங்கிவரும் . தேசிய வளங்கள், சுற்றுப்புறம் மற்றும் பருவ நிலை மாறற துணைத் தலைமை செயலாளர் Abdul Wahid Abu Salim தலைமையில் நடைபெற்ற தேசிய புவி பூங்கா குழுக் கூட்டத்தில் இந்த அங்கீகாரத்தை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் Arififin Deraman அறிவித்தார். Trengganu அரசாங்கத்திற்கு கிடைத்த சிறந்த அங்கீகாரம் இதுவாகும் என அவர் கூறினார். Kenyir ஏரியை புவி பூங்காவாக உருவாக்குவதற்கு கிடைத்த வெற்றி இதுவாகும் என Abdul Wahid வருணித்தார்.