Latestமலேசியா

KJ, இஸ்மாயில் சப்ரி இருவரிடமிருந்து முரண்படும் உத்தரவுகள்

கோலாலம்பூர், மே 9 –  கோவிட் தொற்றுகள் பதிவாகியிருப்பதாக HIDE பட்டியலில் இடம்பெற்றுள்ள இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எனினும் அதிகாரிகள் உத்தரவிடாத வரை அப்பகுதிகளை மூடுவது அவசியமில்லை என நேற்று காலை , அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறியிருந்தார்.

பின்னர் அறிக்கையை வெளியிட்டிருந்த பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி, HIDE பட்டியலில் இடம்பெற்றுள்ள இடங்கள், உடனடியாக மூன்று நாட்களுக்கு மூடப்படுமென தெரிவித்திருந்தார்.

இந்த இரு உத்தரவுகளில் எது சரியானது என செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினரான திரேசா கோக் கேள்வியெழுப்பியிருக்கின்றார்.

இவ்விருவரும், கோவிட் உத்தரவு தொடர்பில் முரண்படுவது இது முதல் முறையல்ல.

இதற்கு முன்பு, MCO பகுதிகளில் மாவட்டம் கடந்து கோவிட்- 19 தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டியவர்கள் போலீஸ் அனுமதியைப் பெறவேண்டுமென இஸ்மாயில் சப்ரி அறிவித்திருந்தார்.

ஆனால் சற்று நேரத்தில் அவ்வாறு செய்யத் தேவையில்லை என கைய்ரி அறிவித்தார்.

முரண்படும் இந்த உத்தரவுகளால் ஏற்படும் விளைவுகளை அவ்விருவரும் உணர மறுத்திருப்பதாக  திரேசா கோக் கூறினார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!