Latestமலேசியா

KK Mart-டுக்கு எதிரான புறக்கணிப்புப் போராட்டம் தொடரும்; அம்னோ இளைஞர் பிரிவு திட்டவட்டம்

கோலாலம்பூர், மார்ச் 23 – ‘அல்லாஹ்’ காலுறை சர்ச்சையில் சிக்கியுள்ள KK Mart-டுக்கு எதிரான புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடருவதில், அம்னோ இளைஞர் பிரிவு உறுதியாக உள்ளது.

அதில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை எனக் கூறிய அப்பிரிவின் தலைவர் Dr Muhamad Akmal Saleh, வேண்டுமென்றால் இந்த சூப்பர் மார்க்கெட்டை கிடப்பில் போட்டு விட்டு வேறு தொழிலைத் தேடிக் கொள்ளுங்கள் என KK Mart நிர்வாகத்தைப் பார்த்துக் கூறியிருக்கிறார்.

தனது கவனக்குறைவுக்கு KK Mart என்னதான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தாலும், முஸ்லீம்களுக்கு அது போதுமானதாக இல்லை;

அவர்களின் அதிருப்தியையும் உணர்வையும் தான் இந்த புறக்கணிப்புப் போராட்டத்தின் வாயிலாக நாங்கள் பிரதிபலிக்கிறோம்; மற்றபடி அதில் உள்நோக்கமோ, அரசியல் காரணங்களோ இல்லை என அக்மால் கூறிக் கொண்டார்.

அந்த காலுறை சர்ச்சை பெரிதாகி, சட்ட விசாரணைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், KK Mart-டுக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

அதில் அம்னோ இளைஞர் பிரிவு அதித் தீவிரமாக உள்ளது; இதையடுத்து அதன் நிலைப்பாடு குறித்து பேச, போக்குவரத்து அமைச்சரும் DAP பொதுச் செயலாளருமான அந்தோனி லோக் தலைமையிலான குழு, முன்னதாக அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியைச் சந்தித்துப் பேசியது.

அச்சந்திப்பு தொடர்பில் கருத்துரைத்த அம்னோ பொதுச் செயலாளரும், இளைஞர் பிரிவின் அந்த புறக்கணிப்பு இயக்கத்திற்கு அம்னோ உச்சமன்றத்தின் ஆசி இருப்பதாகக் கூறி விட்டார்.

அரசியல் தலைவர்கள், இது போன்ற உணர்ச்சிப்பூர்வமான விஷயங்களில் மத்தியஸ்தர்களாக செயல்பட வேண்டுமே ஒழிய, சர்ச்சையை பூதாகரமாக்கி குளிர் காயக் கூடாது என DAP அமைச்சர்கள் தொடர்ந்துக் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வேளையில், KK Mart கிளைக் கடைகளில் அந்த சர்ச்சைக்குரிய காலுறைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டது தொடர்பான போலீஸ் விசாரணை நிறைவுப் பெற்றுள்ளது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட தரப்புகளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டுமாறு பரிந்துரைத்திருப்பதாகவும், சட்டத் துறை அலுவலகத்தின் உத்தரவுக்கு காத்திருப்பதாகவும் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஸ்ரீ மொஹமட் சுஹாய்லி மொஹமட் சாயின் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!