ஷா ஆலாம், ஏப்ரல்-28 இந்த, சிலாங்கூர், குவாலா குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் காலத்தில் ஊழல் அம்சங்கள் கண்டறியப்பட்டால் அது குறித்து பொது மக்கள் புகாரளிக்கலாம்.
அதற்கென 24 மணி நேரமும் செயல்படும் நடவடிக்கை அறையொன்றை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC ஏற்படுத்தியுள்ளது.
ஷா ஆலாமில் உள்ள MACC தலைமையகக் கட்டடத்தில் அந்நடவடிக்கை அறை திறக்கப்பட்டுள்ளது.
2 வார பிரச்சார காலம் நெடுகிலும் இடைவிடாது அது செயல்படும் என MACC அறிக்கையொன்றில் கூறியது.
MACC அகப்பக்கத்தில் காணப்படும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது தொலைப்பேசி எண்களுக்கு அழைத்தோ கூட புகார் தெரிவிக்கலாம்.
இடைத் தேர்தல் வேட்பாளர்கள், கட்சியினர் என சம்பந்தப்பட்ட யாரும் தேர்தல் விதிகளை மீறி நடக்கக் கூடாது என்றும் MACC நினைவுறுத்தியது.
மே 11 இடைத்தேர்தலில் PH, PN, PRM மற்றும் சுயேட்சை என நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.