Latestஇந்தியா

அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது

அயோத்தி , ஜன 22 – இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்  அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேகம்  மிகவும் கோலாகலமாக  இன்று நடைபெற்றது. பல்வேறு ஆகம  பூஜைகள் முடிந்த பிறகு இன்று மதியம் இந்திய நேரப்படி 12.20 மணிக்கு  கும்பாபிஷேகம் மற்றும் ராமர் சிலைக்கு பிரதிஷ்டை நடைபெற்றது. மொத்தம் 71 ஏக்கர் பரப்பளவில்  380 அடி நீளம், 250 அடி அகலம் 161 அடி உயரத்தில் ஆலயம் கம்பீரமாக காணப்படுகிறது. இந்த ஆலயம் 180 மில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்ட போதிலும் அந்த ஆலயத்திற்கு அரசு பணம் எதுவும் ஒதுக்கப்படவில்லை.  நன்கொடையாளர்கள் 360 கோடி டாலர்களை இந்த ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கினர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் விரதம் இருந்து ஸ்ரீரங்கம் உட்பட ராமர் சென்ற இடங்களில் உள்ள ஆலயங்களுக்கு  எல்லாம் சென்று வழிபட்டு புனித நீர் சேகரித்தார்.  இதையடுத்து  இன்று காலை  அயோத்தி நகரம்  ராமர் சிலை பிரதிஷ்டைக்காக   கோலாகலமாக    மாறியது.  அயோத்தி  முழுவதிலும்  மக்கள் கூட்டம் காணப்பட்டது . விழாவுக்கு சுமார்  8,000 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்,  அவர்களில் இரண்டாயிரம்  பேர் சாதுக்கள்  ஆவார்கள்.  

விழாவின் நாயகரான ஸ்ரீ பாலராமரை சிறப்பிக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அயோத்திக்கு காலை 10.30 மணிக்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமர் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தளத்தில் இறங்கிய மோடி, பிறகு அங்கிருந்து கார் மூலம் அயோத்தி கோவிலுக்கு சென்றடைந்தார். சரியாக மதியம்12.10 மணிக்கு அயோத்தி ஆலய கருவறையில் ஸ்ரீ ராமர் சிலை பிரதிஷ்டைக்கான பூஜைகள் தொடங்கின. பிரதமர் மோடி முன்னிலையில் அனைத்து பூஜைகளும் மேற்கொள்ளப்பட்டன. தென் தமிழக ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஆடலசரன் தம்பதி உட்பட 14 தம்பதிகள் ராமர் சிலை பிரதிஷ்டை சடங்குகளை முன்னின்று நடத்தினர். கருவறையில் இருந்த ஸ்ரீ பாலராமருக்கு சரியாக 12 மணி 29 நிமிடங்கள் 8 வினாடியின்போது பிரதிஷ்டை செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது . திட்டமிட்டபடி 84 வினாடிகள் இந்த பூஜை நடந்தது. பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த அகன்ற திரைகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது

நண்பல் 12.30 மணிக்கு பிராண பிரதிஷ்டை நடந்தபோது ஹெலிகாப்டரில் இருந்து  அயோத்தி ராமர் ஆலயம் மீது பூ மழை  பொழியப்பட்டது. மதியம் 1 மணி வரை சுமார் ஒரு மணிநேரம் கருவறை பூஜைகள்  நடைபெற்றன.  நடிகர் ரஜனிகாந்த், நடிகர் அமிதாப் பச்சன்  உட்பட சினிமா நட்சத்திரங்கள் பலரும் இந்த நிகழ்சியில் கலந்துகொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!