Latestமலேசியா

KL கோபுர நிறுவனத்தை எடுத்துக்கொண்ட விவகாரம் தொடர்பில் இரு டத்தோக்கள் கைது

கோலாலம்பூர், ஜன 7 – KL கோபுர நிறுவனத்தை எடுத்துக்கொண்டது தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு இரண்டு மூத்த நிர்வாகிகளை மலேசிய ஊழல் தடுப்பு நிறுவனமான MACC கைது செய்துள்ளது. 49 மற்றும் 59 வயதுடைய அந்த இரண்டு டத்தோ பிரமுகர்களும் நேற்று மாலையில் MACC தலைமையத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் டெலிக்கோம் மலேசியாவிடமிருந்து கே.எல் கோபுர நிறுவனத்தை எடுத்துக்கொண்ட Hydroshoppe Sdn Bhd ட்டின் நிர்வாகியாவார். மற்றொரு நபர் ஒரு வர்த்தகர் என்பதோடு அந்த நிறுவனம் கைமாறுவதற்கு இடைத்தரகராக செயல்பட்டவர் என MACC க்கு நெருக்கமான தகவல்கள் தெரிவித்தன.

கே.எல் கோபுரத்தை எடுத்துக்கொள்ளும் நடவடிக்கைக்கு உதவ பெரும் அளவில் பணத்தையும் ஆடம்பர கடிகாரத்தையும் அவர்கள் கேட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே அந்த இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டதை MACC ஆணையர்
Azam Baki உறுதிப்படுத்தியதோடு தடுத்து வைக்கும் உத்தரவுக்காக அவர்கள் இன்று காலையில் புத்ரா ஜெயாவிலுள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லப்படுவார்கள் என தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!