Latestமலேசியா

KLCC பேரங்காடியின் 4-வது மாடியில் இருந்து விழுந்து பெண் மரணம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 2 – தலைநகர் Suria KLCC பேரங்காடியின் 4-வது மாடியில் இருந்து, 23 வயது மதிக்கத்தக்க பெண் திடிரேன விழுந்து உயிரிழந்த சம்பவம், அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நேற்றிரவு மணி 9. 30 -க்கு நிகழ்ந்த அந்த எதிர்பாரா சம்பவம், பேராங்காடியின் CCTV காமிராவில் பதிவாகியிருந்ததாக டாங் வாஙி மாவட்ட போலீஸ் தலைவர் Noor Dellhan Yahaya தெரிவித்தார்.

அந்த பதிவில், சம்பந்தப்பட்ட பெண் தனி ஒருவராக 4-வது மாடியில் நடந்து செல்வதையும், திடிரேன அவர் மாடியின் ஓரத்தில் போடப்பட்டிருக்கும் தடுப்பில் ஏறியதையும் காண முடிந்ததாக அவர் கூறினார்.

உயரத்திலிருந்து விழுந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!