அம்பாங், செப்டம்பர்-30, KLCC பேரங்காடியின் மூன்றாவது மாடியில் நேற்றிரவு தீ ஏற்பட்டு சைரன் ஒலி எழுப்பப்பட்டதால், வருகையாளர்கள் பதறிப் போயினர்.
பாதுகாப்புக் கருதி கட்டடத்தை விட்டு வெளியேறவும் அவர்கள் உத்தரவிடப்பட்டனர்.
தகவல் கிடைத்து வந்து சேர்ந்த ஹங் துவா தீயணைப்பு மீட்புத் துறை, மூன்றாவது மாடியில் ஆபத்து அவசரங்களுக்குப் பயன்படுத்தப்படும் படிக்கட்டுப் பகுதியில் தீ ஏற்பட்டதை கண்டறிந்தது.
அங்குள்ள பெரியக் குப்பைத் தொட்டிகளில் குவிக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டிகளில் தீ பரவியிருந்தது.
இரவு மணி 8.45-கெல்லாம் தீ முழுமையாக அணைக்கப்பட்டு, அதில் யாரும் காயமடையவில்லை என உறுதிபடுத்தப்பட்டது.
முன்னதாக KLCC கீழ் தளத்தில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்துமிடத்தில் அடர்த்தியான புகை கிளம்பியதாகக் கூறி சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டன.
KLCC நுழைவாசலில் தீயணைப்பு வண்டிகள் வந்து நிற்கும் புகைப்படங்களும் வைரலாகின.