புத்ராஜெயா, பிப் 21 – மார்ச் ஆறிலிருந்து 8-ஆம் தேதி வரை KLCC கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறவிருக்கும் இவ்வாண்டுக்கான தேசிய மகளிர் தின கொண்டாட்டத்தை, பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தொடக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த கொண்டாட்டத்தை முன்னிட்டு, அம்மாநாட்டு மையத்தில் பல்வேறு கண்காட்சிகளும், வர்தக வாய்ப்புகளுக்கான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக, மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
‘Saksama Bersama’ எனப்படும் ‘ஒன்றாக சமத்துவத்தை எட்டுவோம் ‘ எனும் கருப்பொருளில் இவ்வாண்டுக்கான தேசிய மகளிர் தினம் வரவேற்கப்படவுள்ளதாகவும் அவ்வமைச்சு கூறியது.