செப்பாங், மே 8 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், ஆடம்பர வாகனங்களை பயன்படுத்தி அந்நிய சுற்றுப் பயணிகளிடமிருந்து சட்டவிரோதமாக பணம் பறித்து வந்ததாக நம்பப்படும் சிலர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, KLIA ஒன்று மற்றும் இரண்டாவது விமான முனையங்களில் வந்திறங்கும் அந்நிய சுற்றுப் பயணிகளை குறி வைத்து அவர்கள் அந்நடவடிக்கையை மேற்கொண்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
முதல் முறையாக நாட்டிற்கு வரும் சுற்றுப் பயணிகளுக்கு, குறைந்த விலையில் ஆடம்பர வாடகை வாகனங்களை ஏற்பாடு செய்து தருவதாக கூறி, பின்னர் கூடுதல் பணத்தை அவர்களிடம் வசூலித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில், கடந்த ஞாயிற்றுகிழமை தொடங்கி, நேற்று வரையில் ஒன்று மற்றும் இரண்டாவது விமான முனையங்களில், சாலை போக்குவரத்து துறை அதிகாரிகள் மேற்கோண்ட அதிரடி சோதனையில், 20 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட பத்து பேர் கைதுச் செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து, தோயோத்தா அல்பாட் உட்பட பத்துக்கும் அதிகமான செகுசு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில் அந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டதை, சாலை போக்குவரத்து துறையின் திட்டமிடம் அமலாக்க பிரிவு துணை தலைமை இயக்குனர் Aedy Fadly Ramli உறுதிப்படுத்தினார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், அதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது புதிதல்ல. 2022-ஆம் ஆண்டு தொடங்க்கி பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளதையும் ஏடிசுட்டிக்காட்டினார்.
அதனால், அங்கு அவ்வப்போது தொடர் சோதனை நடவடிக்கைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.