ஷா ஆலாம், ஆகஸ்ட்- 21, நாட்டின் நுழைவாயில்களில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தாமல் வெளிநாட்டினரை இங்கு கொண்டு வரும் சட்டவிரோத நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.
செவ்வாயன்று கிள்ளான் பள்ளத்தாக்கு, பினாங்கு, மற்றும் கிளந்தானில் மொத்தமாக 12 பேர் கைதானதைஅடுத்து, அச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
Op Pump சோதனையில் கைதான அவர்களில் மூவர் பெண்களாவர்.
இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நேப்பாளம், மியன்மார், இந்தோனீசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அப்படி சட்டவிரோதமாக உள்ளே நுழைந்துள்ளனர்.
இதில் அதிர்ச்சி என்னவென்றால், KLIA 2-ல் பணியாற்றும் அமுலாக்க அதிகாரிகள் 5 பேரும் அதற்கு உடந்தையாக இருந்துள்ளனர் என்பதே.
வெளிநாட்டினரை சோதனைக்கு உட்படுத்தாமல்,
counter setting முறையில் பணம் வாங்கிக் கொண்டு அவர்களை அந்த ஐவரும் உள்ளே விட்டு வந்துள்ளனர்.
அதற்காக 2022 முதல் இவ்வாண்டு வரை சுமார் 40 லட்சம் ரிங்கிட்டை கமிஷனாகப் பெற்று, அதை ஐவரும் பங்குப் போட்டுள்ளனர்.
அமுலாக்க நிறுவனமொன்றின் அதிகாரிகள் சிலருடன் கூட்டு சேர்ந்து சத்தமில்லாமல் மேற்கொள்ளப்பட்ட வந்த அந்நடவடிக்கை குறித்து, 2022-லிருந்து உளவுப் பார்த்ததில் அந்த 12 பேரும் கைதானதாக மலேசிய ஊழல் தடுப்பாணையம் (MACC) கூறியது.