செப்பாங், ஆகஸ்ட் -21, KLIA 2-ல் சுகாதார பராமரிப்பு மற்றும் அழகுச்சாதன பொருட்களை விற்கும் கடையில் திருடியதன் பேரில் இத்தாலிய ஆடவர் நேற்று கைதானார்.
மொத்தம் 75 ரிங்கிட் 42 சென் மதிப்புள்ள இரு பொருட்களை அந்நபர் தூக்கிக் கொண்டு, பணம் செலுத்தாமல் கடையிலிருந்து வெளியேறும் காட்சி CCTV கேமராவில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட, KLIA 2-ன் இரண்டாவது மாடியில் வைத்து 58 வயது அந்நபர் கைதுச் செய்யப்பட்டார்.
அவரை 3 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டுள்ளது.
கட்டடத்திற்குள்ளே திருடியதற்காக, குற்றவியல் சட்டத்தின் 380-வது பிரிவின் கீழ் அவர் விசாரிக்கப்படுவதை KLIA போலீஸ் உறுதிப்படுத்தியது.