Latestமலேசியா

KLIA Aerotrain ரயில்களை மாற்றும் திட்டம் முன் கூட்டியே 2025 ஜனவரியில் முழுமைப் பெறும்

கோலாலம்பூர், ஜூன்-18, KLIA Aerotrain ரயில்களை மாற்றும் திட்டம், அசல் அட்டவணையைக் காட்டிலும் 2 மாதங்கள் முன் கூட்டியே அடுத்தாண்டு ஜனவரி 31-ஆம் தேதி முழுமைப் பெறும்.

உண்மையில் 2015 மார்ச் 31-ஆம் தேதி தான் அது முழுமைப் பெற வேண்டும்.

ஆனால், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளுடன் ஜூன் 14-ங்காம் தேதி செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து, அது விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாக Malaysia Airports Holdings Bhd ( MAHB ) கூறியது.

முன்கூட்டியே அத்திட்டம் முழுமைப் பெறவிருப்பதானது, விமான நிலைய வசதிகள் பயன்பாட்டில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதில் தாங்கள் மேற்கொண்டு வரும் அயரா முயற்சிக்கு சான்று என MAHB குழுமத்தின் இடைக்கால தலைமை செயல் அதிகாரி மொஹமெட் ரஸ்தாம் ஷாரோம் ( Mohamed Rastam Shahrom ) சொன்னார்.

தரமான சேவைக்கான உடனடித் தேவையைப் பூர்த்திச் செய்வதோடு, பயணிகளுக்கு உலகத் தரத்திலான சேவையையும் வசதிகளையும் தயார் செய்வதில் இவ்வட்டாரத்தின் முன்னணி விமான நிலையமாக KLIA தொடர்ந்து நீடிக்கவும் இது உதவுகிறது என்றார் அவர்.

அத்திட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் ALSTOM நிறுவனம் 3 புதிய ரயில்களின் தருவிப்பு, கூடுதலாக 2 பாதைகள் உருவாக்கம், மற்றும் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கான சோதனை ஓட்டம் ஆகிவற்றை மேற்பார்வையிடும் என்றும் அவர் சொன்னார்.

புதிய ரயில் பெட்டிகள் சீனாவில் இருந்து இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டு இறுதி வாக்கில் மலேசியா வந்திறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிலைய வசதிகளைத் தரமுயர்த்தும் பணிகள் நெடுகிலும் பொறுமைக் காத்து வரும் KLIA பயணிகளிக்கு நன்றித் தெரிவித்துக் கொள்வதாகவும் மொஹமெட் ரஸ்தாம் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!