
மரபணு ரீதியாக மாற்றம் கண்ட ‘Kraken’ அல்லது Omicron XBB.1.5 தொற்று மலேசியாவில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
எனினும், அமெரிக்காவில் தற்சமயம் முதன்மை தொற்றாக திகழும் XBB.1.5 தொடர்ந்து கண்காணிக்கப்படும் என, சுகாதார தலைமை இயக்குனர் டான் ஸ்ரீ டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா தெரிவித்தார்.
குறிப்பாக, XBB.1.5 தொற்று பரவல் அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகியவை கண்காணிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
Omicron XBB தொற்றிலிருந்து உருமாறிய XBB.1.5 தொற்று, இதற்கு முன் அடையாளம் காணப்பட்ட BA.2.75 மற்றும் BA.2.10.1 ஆகிய தொற்றுகளின் கலைவை இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
அந்த புது வகை தொற்றால், மீண்டும் ஒரு தொற்று அலை ஏற்படலாம் எனவும் அஞ்சப்படுகிறது.