![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/10/238648.jpg)
கோலாலம்பூர், அக்டோபர் 8 – நேற்று பள்ளி மாணவி ஒருவர் கொடுமைப்படுத்தியதால் பள்ளி கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து இறந்ததாக வைரலான இரண்டு வீடியோ கிளிப்களை, Kuen Cheng உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் அலுவலகம், மறுத்துள்ளது.
அது பொய்யான வீடியோ என்றும், அதில் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவியும் தனது பள்ளி மாணவர் அல்ல என்பதையும் அது தெளிவுபடுத்தியது.
இது தொடர்பாக, இப்பள்ளி மலேசியக் காவல்துறையிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது.
ஆதாரமற்ற மற்றும் தவறான செய்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராகத் தகுந்த தருணத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப் பள்ளிக்கு உரிமை உள்ளது என தனதறிக்கையில் அது தெரிவித்திருக்கிறது.