Latestமலேசியா

Lata Changkah நீர் வீழ்ச்சியில் இளம்பெண் மூழ்கி மரணம்

பண்டார் பெர்மைசூரி, ஏப் 27 – Trengganu Setiu வில் Kampung Ulu Seladang கில் Lata Changkah நீர் வீழ்ச்சியில் இளம் பெண் ஒருவர் மூழ்கி மாண்டதைத் தொடந்ந்து அந்த நீர் வீழ்ச்சிக்கு உல்லாச பொழுதை கழிக்கச் சென்ற குடும்பத்தினரின் மகிழ்ச்சி சோகத்தில் முடிந்தது. தனது உறவினரான ஐந்து பெண்களுடன் குளித்துக்கொண்டிருந்தபோது வழுக்கி கீழே விழுந்ததால் 19 வயதுடைய Nor Alia Farhana மரணம் அடைந்தார். கெமமான் , Seri Bandi யைச் சேர்ந்த Nor Alia வை அவரது குடும்ப உறுப்பினர்கள் நீர் வீழ்ச்சியிலிருந்து மீட்ட போதிலும் அவர் இறந்துவிட்டதை மருத்துவ குழுவினர் உறுதிப்படுத்தினர் என Setiu போலீஸ் தலைவர் Affandi Hussin தெரிவித்தார். இதனிடையே நீர் தொடர்பான பொழுது போக்கு நடவடிக்கைகளுக்காக எங்கு சென்றாலும் பாதுகாப்புக்கு பொதுமக்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!