Latestமலேசியா

LBS குழுமம் இவ்வாண்டு 12 புதிய மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளவிருக்கிறது

செப்பாங், ஜன 10 – நகர் மேம்பாட்டு நிறுவனமான LBS Bina Group குழுமம், 2023-இல் 12 புதிய திட்டங்களை மேற்கொள்ளவிருக்கின்றது .

209 கோடி ரிங்கிட் மொத்த மேம்பாட்டு மதிப்பினைக் கொண்ட அந்த திட்டங்கள் கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜோகூர், பஹாங், பேராக் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படவிருப்பதாக, அக்குழுமத்தின் நிர்வாக தலைவர் Tan Sri Lim Hock San தெரிவித்தார்.

இவ்வேளையில், இப்புதிய மேம்பாட்டுத் திட்டங்களின் வாயிலாக இவ்வாண்டு 200 கோடி ரிங்கிட்டை விற்பனை இலக்கை எட்ட LBS Bina Group குழுமம் நிர்ணயித்திருப்பதாக அவர் கூறினார்.

 

சிலாங்கூர், டெங்கிலில் அமைந்திருக்கும் Cyebersouth விற்பனை காட்சி கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Tan Sri Lim Hock San இந்த விபரங்களைத் தெரிவித்தார்.

முன்னதாக, 2022-இல் LBS குழுமம் 200 கோடி ரிங்கிட் சொத்து விற்பனையை பதிவு செய்ததாக அவர் கூறினார். இது தமது குழுமம்,ஏற்கனவே நிர்ணயித்த 160 கோடி ரிங்கிட் விற்பனை இலக்கை காட்டிலும் 25 விழுக்காடு அதிகம் என Tan Sri Lim Hock San குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!