கோலாலம்பூர், ஏப்ரல் 29 – LBS வீடமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் வீடு வாங்கியவர்களுக்கு நடத்தப்பட்ட அதிர்ஷ்ட குலுக்கல் போட்டியில் 1,400 வீட்டு உரிமையாளர்கள் மொத்தம் RM 1.5 மில்லியன் மதிப்புள்ள பரிசுகளைத் தட்டிச் சென்றுள்ளனர்.Fabulous Extra 2022 – 2023 எனும் திட்டத்தின் மகத்தான வெற்றியை கொண்டாடும் வகையில் கடந்த சனிக்கிழமையன்று Cybersouth விற்பனை மையத்தில், LBS அதன் மாபெரும் நிறைவு விழாவை நடத்தியது.
அதில் வியப்பிக்கும் வகையில் 17 அதிர்ஷ்ட வீட்டு உரிமையாளர்கள், அங்கு நடத்தப்பட்ட அதிர்ஷ்ட குலுக்கல் போட்டியில் புத்தம் புதிய பெரோடுவா ஆக்சியா கார்களைப் பரிசுகளாக வென்றுள்ளனர்.LBSயின் கீழ் வீடு வாங்குபவர்களின் வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு, இது ஒரு புதிய தொடக்கமாக அமையும் என LBS நிர்வாக இயக்குநர் டாக்டர் லிம் ஹாக் சான் தெரிவித்தார்.இருசக்கர வாகனம், ஹோம் தியேட்டர்கள், மலையில் ஓட்ட கூடிய பைக்குகள் போன்ற மற்ற பரிசுகளும் அந்த விழாவில் வழங்கப்பட்டுள்ளது.
அந்த அதிர்ஷ்ட குலுக்கலில் பரிசுகளைத் தட்டிச் சென்ற சிலர் தங்களின் மகிழ்வான தருணங்களை வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டனர்.இதனிடையே, ராயா பெருநாளை முன்னிட்டு ‘EMAS BLING BLING BERSAMA LBS’ எனும் புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மே மாத இறுதிக்குள் LBS-யிடம் இருந்து வீடு வாங்குபவர்களுக்கு அத்திட்டத்தின் வழி தங்கத்தை வெல்லும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.
வீடுகளை வடிவமைத்து விற்றோம் என்றில்லாமல், LBS தனது வாடிக்கையாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும் இலக்குடன் உறவுகளை பலப்படுத்தும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.