Latestமலேசியா

LBS வீடமைப்பு திட்டத்தில் வீடுகள் வாங்கியோருக்கு அதிஸ்ட குலுக்கில் மாபெரும் பரிசாக ஐவருக்கு புரோடுவா Axia கார்கள்

கோலாலம்பூர், மே 23 – LBS Bina Group பெர்ஹாட்டின் வீடமைப்பு திட்டத்தில் வீடுகள் வாங்கியோருக்காக அதிஸ்ட குலுக்கு நடத்தப்பட்டது. 2022 ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதியிலிருந்து டிசம்பர் 31ஆம் தேதிவரை வீடுகள் வாங்கியோர் இந்த அதிஸ்ட குலுக்கிற்கு தகுதி பெற்றனர். நான்கு லட்சம் ரிங்கிட் மதிப்புடைய கவர்ச்சிகரமாக 600 பரிசுகளுக்கான வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு LBS வீடமைப்பு திட்ட கண்காட்சி அலுவலகத்தில் பரிசுகளை பெற்றுக்கொண்டனர். இந்த குலுக்கள் முகநூலில் நேரலையாகவும் இடம்பெற்றது. முதல் பரிசுக்குரிய ஐந்து வெற்றியாளர்கள் மாபெரும் பரிசாக ஐந்து perodua Axia கார்களை பெற்றனர்.

மேலும் 110 மோட்டார் சைக்கிள்கள், துணி துவைக்கும் இயந்திரங்கள், குளிர் சாதனப் பெட்டிகள், வீடுகளுக்கான மின்சார பொருட்கள் உட்பட மேலும் பல பரிசுகளும் வெற்றி யாளர்களுக்கு வழங்கப்பட்டன. LBS Bina Group Sdn Berhaட்டின் நிர்வாக தலைவர் டான்ஸ்ரீ Lim Hock San , நிர்வாக இயக்குனர் Joey Lim Hock Guan, நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான Daniel Lim Hock Sing உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். LBS வீடமைப்பு திட்டத்தில் வீடு வாங்கியோர் மகிழ்ச்சியடையும் நோக்கத்தில் அவர்களுக்காக அதிஸ்ட குலுக்கு நடத்தப்பட்டதாக டான்ஸ்ரீ Lim Hock San தெரிவித்தார். அதோடு KITA@cybersouth township திட்டத்தில் வீடு வாங்குவதற்கு பதிவு செய்தவர்கள் 40 அங்குலம் கொண்ட இலவச தொலைக்காட்சி பெட்டியை பெறுவார்கள் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!