
ஜோகூர் பாரு, மார்ச் 16 – LCS போர் கப்பல் மோசடி தொடர்பில் அதிகமானோர் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணயத்தின் தலைவர் Tan Sri Azam Baki தெரிவித்தார் .
LCS போர் கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பான விசாரணை தொடரப் பட வேண்டுமென பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியதை அடுத்து, அசாம் பாக்கி அவ்வாறு கருத்துரைத்தார்.
அந்த LCS திட்டம் மிகப் பெரிய மோசடியையும் பண விரயத்தையும் உட்படுத்திய நிலையில், தொடக்கத்தில் அதன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை போதுமானதாக இல்லையென பிரதமர் குறிப்பிட்டார்.
அதோடு அந்த விவகாரம் தொடர்பில் , சம்பந்தப்பட்ட முக்கியமான தரப்புகள் மீது குற்றம் சாட்டப்படவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.