ஜோர்ஜ் டவுன், பிப் 18 – தனித்து வாழும் தாய் Loh Siew Hong கின் மூன்று பிள்ளைகள் இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்பட்டது பெர்லீஸ் சட்டத்தின் கீழ்
சட்டப்பூர்வமானதாகும். அது கேள்வி எழுப்பக்கூடியதாக இல்லையென பெர்லீஸ் முப்தி Asri Zainul Abidin கூறியுள்ளார்.
பெர்லீஸ் இஸ்லாமிய சட்டத்தின்படி தாய், தந்தை அல்லது காப்பாளர் வயது குறைந்த தங்களது பிள்ளைகளை இஸ்லாத்திற்கு மதம் மாற்றலாம் என அவர் தெரிவித்தார். Loh Siew Hong கின் பிள்ளைகள் மதம் மாற்றப்பட்ட விவகாரத்தில் அவரது அனுமதி பெறத் தவறியது சட்டத்திற்கு எதிரானது என சிலர் குற்றச்சாட்டுவதை Asri Zainul Abidin சாடினார்.
பெற்றோரில் தந்தை அல்லது தாய் ஆகிய இருவரில் ஒருவர் தங்களது பிள்ளைகளை இஸ்லாமிய சமயத்திற்கு மதம் மற்றுவதை 2016ஆம் ஆண்டு பெர்லீஸ் சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தாம் வலியுறுத்த விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டினர்.