ஷா ஆலாம், செப்டம்பர் -1, Love Scam மோசடியில் சிக்கி 19 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் பெரும் பணத்தை இழந்து தவிக்கிறார் சிலாங்கூர் ஷா ஆலாமைச் சேர்ந்த முன்னாள் வங்கியாளரான 64 வயது மாது.
சமூக ஊடகத்தில் அறிமுகமான ஆடவரின் பேச்சை நம்பியதால் அவருக்கு அந்த நிலைமையென, சிலாங்கூர் போலீஸ் அறிக்கையொன்றில் கூறியது.
அந்த ‘இணையக் காதலரிடமிருந்து, தனக்கு பார்சல் வந்திருப்பதாகவும், அதைப் பெற வேண்டுமென்றால் 12 வங்கிக் கணக்குகளில் கேட்கப்படும் பணத்தைப் போட வேண்டும் என்றும் அவர் நம்ப வைக்கப்பட்டுள்ளார்.
கொஞ்சமும் யோசிக்காமல் மொத்த சேமிப்புப் பணத்தையும் மாற்றி விட்டு, ஓய்வுப் பெற்ற தனியார் துறை ஊழியரான அவர் இன்று ஏமாந்து நிற்கிறார்.
அச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.