
கோலாலம்பூர், ஜன 30 – கோலாலம்பூர் ஜாலான் ராஜா லாவுட் Bandaraya LRT நிலையத்திற்கு அருகே மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டுவரும் மேம்பாட்டு நிறுவனம் தனது பணிகளை உடனடியாக நிறுத்தும்படி பணிக்கப்பட்டுள்ளது. Bandarays LRT நிலையத்தின் தூணில் பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் மேயர் டத்தோஸ்ரீ Mahadi Che Ngah வெளியிட்ட அறிக்கையில் தெரிரிவித்துள்ளார். அண்மையில் தடைப்பட்ட LRT சேவைக்கான காரணத்தை கண்டறிவதற்கு தரை போக்குவரத்து நிறுவனம் விசாரணை நடத்துவதை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். சம்பந்தப்பட்ட அந்த மேம்பாட்டு பணிகள் தற்போது தொடக்க கட்டத்தில்தான் இருப்பதாக அவர் தெரிவித்தார்.