
கடந்தாண்டு ஆகஸ்ட்டு மாதம் வாக்கில், Macau மோசடியில் சிக்கி இருவர் 66 ஆயிரத்து 120 ரிங்கிட்டை இழந்தனர்.
அதில் 25 வயது மதிக்கத்தக்க முதலாவது நபர், இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட பழைய பண நோட்டுகளை வாங்கும் விளம்பரத்தை நம்பி பணத்தை பறிகொடுத்தாக, பஹாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ ரம்லி முஹமட் யூசோப் தெரிவித்தார்.
தம்மிடம் இருந்த பழைய இரண்டு ரிங்கிட் நோட்டை, 30 ஆயிரம் அமெரிக்க டாலர் விலையில் விற்க முற்பட்ட போது அவர் ஏமாற்றப்பட்டதாக நம்பப்படுகிறது.
மற்றொரு சம்பவம், இல்லாத முதலீட்டு திட்டத்தை நம்பி ஏமாந்த இல்லத்தரசி ஒருவரை உட்படுத்தியதாகும்.
கடந்தாண்டு ஆகஸ்ட்டு 16-ஆம் தேதி, 63 வயதுடைய அம்மாது தங்க முதலீட்டாளர் என கூறிக் கொண்ட நபரை நம்பி 40 ஆயிரம் ரிங்கிட்டை பறிகொடுத்தார்.