
ஊழல் தடுப்பு ஆணையம் தமக்கு அழைப்பு விடுத்திருப்பதை, தெங்கு டத்தோ ஸ்ரீ ஜப்ரூல் தெங்கு அப்துல் அசிஸ் உறுதிப்படுத்தினார்.
எனினும், எந்த வழக்கு தொடர்பில் வாக்குமூலம் அளிக்க தமக்கு அந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை என, அனைத்துலக வாணிப தொழிலியல் அமைச்சரான அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 பெருந் தொற்றுக்கு பின், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உந்தச் செய்யும் நோக்கில், முன்னாள் பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமைத்துவத்தின் கீழ் ஜானா விபாவா திட்டம் அறிமுகம் கண்டது.
எனினும், அத்திட்டத்தில் நிகழ்ந்த ஊழல் தொடர்பில், முஹிடின் விசாரணைக்கு அழைக்கப்பட்டதை, ஊழல் தடுப்பு ஆணையர் அசாம் பாக்கி உறுதிப்படுத்தியிருந்தார்.