Latestஉலகம்

குழந்தை அணையாடை தயாரிப்பை நிறுத்தும் ஜப்பானின் diaper நிறுவனம்; அதிரடி அறிவிப்பு

ஜப்பான், மார்ச் 27 – ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைந்து வருகின்ற நிலையில், Oji Holdings நிறுவனம் குழந்தைகளுக்கான diaper எனும் அணையாடை தயாரிப்பை நிறுத்திவிட்டுப் பெரியவர்களுக்கு மட்டும் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

2001ஆம் ஆண்டில் 700 மில்லியன் diaper தயாரிக்கப்படுள்ளன. ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 400 மில்லியனுக்குக் குறைந்துள்ளது.

பிறப்பு விகிதம் சரிவதால் குழந்தை அணையாடைகளுக்கான தேவையும் குறைந்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அந்த நிறுவனம், கையிருப்பு முடியும் வரை அவை ஐப்பானில் விற்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

வரும் செப்டம்பர் தொடங்கி உள்ளூர் விநியோகத்திற்கான குழந்தை அணையாடைகளின் உற்பத்தியை முழுமையாக நிறுத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது.

இதனிடையே, ஜப்பானின் வயது முதியவர்களின் தாதிமை இல்லங்களில் diaper போன்ற பொருள்கள் அதிகம் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இனி பெரியவர்களுக்கான அணையாடைகளை அது அதிக அளவில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!