Latestமலேசியா

MCO கட்டுப்பாடுகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன:  சாடும் அரசியல்வாதிகள்

கோலாலம்பூர், மே 5 – நாளை தொடங்கி சிலாங்கூரின்  6 மாவட்டங்களில்  அமலுக்கு வரவிருக்கும் MCO நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு,  தெளிவின்றி குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக, அரசியல்வாதிகள் குறை கூறியிருக்கின்றனர்.

அந்த உத்தரவு, நல்ல விவேகத்துடன் எடுக்கப்பட்ட ஒரு முடிவு அல்ல என முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் சாடியிருக்கின்றார்.

ஒரே செயலை திரும்ப திரும்ப செய்து, ஆனால் வித்தியாசமான ஒரு முடிவு வர வேண்டுமென எதிர்பார்க்கும் வீணற்ற ஒரு முயற்சி தான் இந்த MCO என அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

இவ்வேளையில், எதன் அடிப்படையில் தேசிய பாதுகாப்பு மன்றம்,  குறிப்பிட்ட மாவட்டங்களில் MCO கட்டுப்பாட்டை விதிப்பதற்கு முடிவு செய்தது என  செகாம்புட்  நாடாளுமன்ற உறுப்பினர்  ஹன்னா யோ கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

1Utama, MCO கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.  அதற்கு முன் உள்ள சாலையை கடந்தால்  கோலாலம்பூர்  TTDI பகுதிக்குள் நுழைந்து விடுவோம். அங்கு MCO கட்டுப்பாடு இல்லை.

எனவே,  MCO- வுக்கான ஒரு பகுதியை நிர்ணயிப்பதில் தெளிவான ஒரு வரையறை இல்லை என அவர் கூறினார்.

இதனிடையே, MCO உத்தரவை அறிவித்த பின், மறுநாளன்றே  தெளிவான SOP  நடைமுறைகள் வெளியிடப்படுமென கூறியிருப்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது என   பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர்  ஒங் கியான் மிங் வினவியிருக்கின்றார்.

ஏனெனில், MCO  உத்தரவு என்பது புதிய ஒரு முடிவல்ல. மாறாக  சிலாங்கூரில்  அந்த கட்டுப்பாட்டினை அமல்படுத்துவது இது மூன்றாவது தடவை என்றாரவர்.

மேலும், இந்த MCO கட்டுப்பாடுகள் எவ்வாறு கோவிட் பெருந்தொற்றைக்  கட்டுப்படுத்தக் கூடியது என  மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான கிள்ளான் தொகுதியின் மக்கள் பிரதிநிதியான சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டிருக்கின்றார்.

கடைகள் செயல்படும் நேரத்தை ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரமாக குறைப்பதின் வாயிலாக, தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி விட முடியுமா  என்றாரவர்.

மேலும், ராயாவிற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் 15 விருந்தினர்களுக்கான எண்ணிக்கை மிக அதிகம் எனவும் அவர் தமது கருத்தினை பதிவிட்டிருக்கின்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!