Latestமலேசியா

Mekar திட்டத்தின் கீழ் 80,000-திற்கும் மேற்பட்டோர் பயன் அடைந்தனர்

போர்ட் கிள்ளான், மார்ச் 12 – 2019 ஆம் ஆண்டு முதல் Mekar திட்டத்தின் கீழ் அடையாளக் கார்டுகள், பிறப்புப் பத்திரங்கள் மற்றும் மரணங்கள் பதிவுக்கான 80,000 த்திற்கும் மேற்பட்டோரின் விண்ணப்பங்களை தேசிய பதிவுத்துறை பெற்றுள்ளது. மாற்றுத் திறனாளிகள், படுத்த படுக்கையாக நோயில் இருப்பவர்கள் மற்றும் ஒதுக்குப்புறமான பகுதியில் குடியிருப்பவர்கள் தேசிய பதிவுத்துறையின் கிளை அலுவலகங்களுக்கு நேரடியாக செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு உதவும் நோக்கத்தில் Mekar திட்டம் தொடங்கப்பட்டதாக தேசிய பதிவுத்துறையின் துணை இயக்குனர் Saiful Yazan தெரிவித்தார். சம்பந்தப்பட்டவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவர்களது விவரங்களை பெற்று ஆவணங்களை வழங்கும் ஏற்பாடுகளை Mekar திட்டம் கொண்டுள்ளதாக அவர் விவரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!