Latestஉலகம்மலேசியா

MH விமானம் சுட்ட வீழ்த்தப்பட்ட பின் BUG எறிபடையின் பேட்டரி ரஷ்யாவுக்கு கொண்டுச் செல்லப்பட்டது

ஹேம்ஸ்டெர்டெம், ஜூன் 11 – 2014 ஆம் ஆண்டில் உக்ரைய்னின் கிழக்குப் பகுதியில் மலேசியாவின் MH 17 விமானத்தை சுட்டு வீழ்த்திய Bug எறிபடையின் பேட்டரியை அகற்றிய பின்னர் அதனை குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு நபர்கள் ரஷ்யாவிற்கு கொண்டுச் சென்றதாக நெதர்லாந்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2014ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி நெதர்லாந்தைச் சேர்ந்த 196 பிரஜைகள் உட்பட போயிங் 777 விமானத்தில் இருந்த அனைத்து 298 பேரும் கொல்லப்படுவதற்கு தரையிலிருந்து விண்ணுக்கு பாய்ச்சப்பட்ட அந்த எறிபடை நடத்திய தாக்குதலே காரணம். அந்த எறிபடை சென்ற வழிதடத்தையும் நீதிபதிகள் பரிசோதித்துள்ளனர்.

உக்ரேய்ன் பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த PERVOMAYSKI நகருக்கு அருகேயுள்ள இடத்திற்கு எறிபடையின் பேட்டரி நிறுத்தப்பட்டிருந்தாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எம்.எச் 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின்னர் உடனடியாக தற்காப்பு செயல்முறைத் திட்டம் உடனடியாக மாற்றப்பட்டதற்கான ஆலோசனை முன்மொழியப்பட்தாக இடைமறிக்கப்பட்ட தொடர்பு தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!