
தெ ஹெக், ஜன 26- Malayaisa Airlines சின் MH 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பில் புதிய தகவலை விசாரணை குழுவினர் அடுத்த மாதம் வெளியிடவிருக்கின்றனர். 2014 ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி உக்ரைய்னின் கிழக்குப் பகுதியிலுள்ள வான் வெளியில் பறந்துகொண்டிருந்த அந்த விமானத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய உண்மையான தரப்பினர் யார் என்பதை விசாரணைக் குழுவினர் வெளியிடுவார்கள். அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் மூவர் குற்றவாளிகள் என கடந்த ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது. MH 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் அவ்விரமானத்தில் இருந்த அனைத்து 298 பேரும் கொல்லப்பட்டனர்.