கோலாலம்பூர், பிப் 18 – நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில், MH370 விமானத்தை தேடும் புதிய முயற்சி குறித்த பேச்சு வார்த்தையில் , சீனா, ஆஸ்திரேலிய நாடுகளுடன் மலேசியா பேச்சு வார்த்தையில் ஈடுபடக் கூடும்.
பிரிட்டன் விமான பொறியியலாளர் ரிச்சர்ட் காட்ஃபிரே (Richard Godfrey) மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான MH370 விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கும், புதிய தடயங்கள் கிடைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
அவர் வழங்கியிருக்கும் தடயங்களைத் தற்போது ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு ஆய்வு செய்து வருகிறது. அப்பிரிவு அதன் ஆய்வினை முடித்துக் கொண்ட பிறகே, புதிய தேடல் குறித்த பேச்சுவார்த்தையில் மலேசியா ஈடுபடுமென, நாட்டின் போக்குவரத்து அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.