மியாமி, பிப் 21- மியாமிரில் பிரபலமான கடற்கரைப் பகுதிக்கு அருகே சுற்றுப்பயணிகள் உட்பட பலர் நீச்சலில் ஈடுபட்டிருந்த வேளையில் சில மீட்டருக்கு அப்பால் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்தது.
இந்த சம்பவம் நிகழ்ந்தபோது அந்த கடந்கரையில் அதிகமான மக்கள் கூட்டம் காணப்பட்டது. எனினும் அவர்களில் எவரும் காயம் அடையவில்லை.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு பயணிகள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். அவர்களது நிலைமை சீராக உள்ளது. அந்த ஹெலிகாப்டர் விபத்தைத் தொடர்ந்து மியாமி கடற்கரைக்கு செல்லும் இரண்டு முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டன.