Latestமலேசியா

முதலீடு நோக்கத்திற்காகவே தங்கக் கட்டிகள் வாங்கப்பட்டன; அமான் பாலஸ்தீன் இயக்கம் விளக்கம்

பாங்கி, நவ 28 – MACC பறிமுதல் செய்த தங்கக் கட்டிகள் முதலீடு நோக்கத்திற்காக அமான் பாலஸ்தீன் (Aman Palestine) வாங்கிருந்ததாக அந்த இயக்கத்தின் வழக்கிறிஞர் முஹம்மட் ரபீக் ரஷீத் அலி தெரிவித்திருக்கிறார். பொதுமக்களின் நன்கொடையை பயன்படுத்தி அமான் பாலஸ்தீன் இயக்கம் லாபம் அடைந்துள்ளதாக அந்த தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த MACC கூறியிருந்ததை முஹம்மட் ரபீக் மறுத்துள்ளார். முதலீடு நோக்கத்திற்காக தங்கக் கட்டிகளை வாங்க முடியும் என அமான் பாலஸ்தீன் சட்ட விதிகள் அனுமதி அளித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் குற்றச்சாட்டு தீய நோக்கத்தை கொண்டதோடு பொய்யானது என அவர் தெரிவித்தார். தங்கக் கட்டிகள் மதிப்பு வாய்ந்தவை என்பதோடு அவற்றை எளிதாக ரொக்க ரொகைக்கு மாற்ற முடியும் என அமான் பாலஸ்தீன் மையைத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் முஹம்மட் ரபீக் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!