கோலாலம்பூர், அக்டோபர்-9 – கோலாலம்பூர், Mid Valley பேரங்காடியில் உள்ள பிரபல Auntie Anne உணவகம், முழுமையான கிருமி நீக்கம் மற்றும் சுத்தப்படுத்தும் பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படுகிறது.
அதன் பணியாளர் ஒருவர், pretzel ரொட்டி செய்வதற்காக பிசைந்த மாவை முத்தமிடும் வீடியோ வைரலானதே அதற்குக் காரணம்.
சம்பந்தப்பட்ட அப்பெண்ணை உடனடியாக வேலையிலிருந்து நீக்கியிருப்பதாகவும், Auntie Anne நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
அதில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லையென அவ்வுணவகம் உத்தரவாதமளித்தது.
பிசைந்த மாவை முத்தமிட்ட சம்பந்தப்பட்ட அப்பெண்ணின் செயல் முன்னதாக வைரலாகி வலைத்தளவாசிகளை முகம் சுளிக்க வைத்தது.