கோலாலம்பூர், ஜூன்-29 – கோலாலம்பூர் Mid Valley Megamall பேரங்காடியில் ஒரு மின் படிகட்டு (escalator) பெரும் வெடிப்புச் சத்தத்துடன் உடைந்த சம்பவம் வைரலாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்பகலில் அச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
Escalator-ரில் இருந்து திடீரென பெரும் சத்தம் கேட்டு, அதன் மேல்பகுதி உடைந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் Escalator-ரில் இருந்து பதறியோடினர்.
எனினும் அச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என வீடியோவைப் பதிவேற்றிய X தள கணக்கின் உரிமையாளர் கூறினார்.
அது குறித்து Mid Valley பேரங்காடி சார்பில் இன்னும் அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.