Latestமலேசியா

MIED யிடமிருந்து 230 மாணவர்கள் கல்வி கடனுதவிக்கான காசோலைகளைப் பெற்றனர்

செந்தூல், ஜன 15 – 1984ஆம் ஆண்டு தொடங்கி மஇகா இயக்கத்தின் பெரும் கல்விக் கரமாகச் செயல்பட்டு வரும் MIED எனப்படும் கல்வி மேம்பாட்டு கழகம் பல மாணவர்களின் மேற்கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியிருக்கின்றது.

அந்த வகையில், இவ்வாண்டு மருத்துவம், பொறியியல், சட்டத்துறை போன்ற பலதரப்பட்ட துறைகளில் மேற்கல்வியைத் தொடர திட்டமிட்டுள்ள, தகுதியான 230 மாணவர்களுக்கு கல்விக் கடனுதவியை MIED எடுத்து வழங்கியது.

வெளியூர் மற்றும் உள்ளூர் பல்கலைக்கழகங்களில் கல்வியைத் தொடரவுள்ள அந்த மாணவர்களுக்கு இன்று காலை செந்தூல், HGH மாநாட்டு மண்டபத்தில் கல்வி காசோலை வழங்கும் விழா நடைபெற்றது.

MIED கழகமும் மஇகா கட்சியின் தலைவருமான டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், அந்தக் காசோலைகளை எடுத்து வழங்கினார்.

இதுவரை MIED கழகம் வழங்கிய உதவித் தொகை மூலம் மலாய், சீன, இந்திய மற்றும் மற்ற இனத்தைச் சேர்ந்த 12,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனைந்திருப்பதாக தமதுரையில் அவர் கூறினார்.

”கல்விதான் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுகிறது. எனவே, எதிர்காலத்தில் இன்னும் அதிகமான நன்கொடைகளைத் திரட்டி, பல மாணவர்களின் கல்விக்கு மஇகாவும் MIED கழகமும் துணை நிற்கும் என்பது திண்ணம். அதே சமயம், சமூகத்தின் உதவியோடு படித்து முடித்து பட்டதாரிகளாக உருவெடுக்கும் மாணவர்களும் நன்றிக்கடனைச் செலுத்தும் விதமாக அதே சமுதாய வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும்’’ என தமதுரையில் விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

இந்நிலையில், எஸ்பிஎம் முடித்து மேற்கல்வியைத் தொடர்பவர்களுக்கு மட்டுமல்ல, கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கும் தொழிற்கல்வி பயில்வதற்குண்டான வாய்ப்புகளை MIED ஏற்படுத்தித் தரவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!