லண்டன், ஆகஸ்ட்-27 – Mpox நோய் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில், உலக சுகாதார நிறுவனம் (WHO) 6 மாத கால உலகலாய தடுப்புத் திட்டத்தை தொடங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட நாடுகளில் கண்காணிப்பை அதிகரிப்பது, நோய் பரவலைத் தடுப்பதற்கான யுக்திகளை அதிகரிப்பது உள்ளிட்டவை அத்திட்டத்தின் செயல்பாடுகளாகும்.
செப்டம்பர் வரை அடுத்தாண்டு பிப்ரவரி வரை அத்திட்டத்தை மேற்கொள்ள மலேசிய ரிங்கிட்டுக்கு 58 கோடியே 81 லட்சம் தேவைப்படுமென அறிக்கையொன்றில் WHO கூறியது.
குறிப்பாக, mpox நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஆப்ரிக்க கண்டத்தில் தடுப்பூசிகள் பரவலாகக் கிடைப்பதை உறுதிச் செய்வதை அத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் மூலம், mpox நோயின் மையமாக விளங்கும் கோங்கோவிலும் (Congo) மற்ற நாடுகளிலும் அது மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்.
இந்நிலையில், நோய் தாக்கும் அபாயம் அதிகமுள்ளவர்களுக்கும், நோய் தொற்றியவர்களுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டிருந்தவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் வியூகத் தடுப்பூசி முன்னெடுப்பில் முன்னுரிமை வழங்கப்படுமென்றும் அது தெரிவித்தது.
இந்த mpox நோய், உலகளவில் 2022-ல் பரவத் தொடங்கியதிலிருந்து இதுவரை 1 லட்சம் நோய் பாதிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஆப்ரிக்க கண்டத்தில் தான் வரலாறு காணாத அளவுக்கு அது பரவியுள்ளது.
கோங்கோவில் 500 மரணங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.