
தலைநகலுள்ள, எண்ணெய் நிலையம் ஒன்றில் தீக்கிரையான MPV பல்நோக்கு வாகனத்தில் இருந்து, பெண் ஒருவர் காயம் எதுவும் இன்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இன்று காலை மணி எட்டு வாக்கில், காஜாங் நெடுஞ்சாலையிலுள்ள பெட்ரோனாஸ் எண்ணெய் நிலையத்தில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக, சிலாங்கூர் தீயணைப்பு மீட்பு படை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட வாகனம் 90 விழுக்காடு தீக்கிரையான வேளை ; அதில் இருந்த பெண் தீ ஏற்பட்டவுடன் உடனடியாக வாகனத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.