Latestமலேசியா

MPV வாகனம் கவிழ்ந்தது; திரெங்கானு பல்கலைக்கழக மாணவர் மரணம்; மூவர் காயம்

கெமமான், மே 19 – Kijal-லுக்கு அருகே LPT  2  கிழக்குகரை நெடுஞ்சாலையில் 312.4 ஆவது  கிலோமீட்டரில் கார்  ஒன்று கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த  திரெங்கானு மலேசியா பல்கலைக்கழகத்தின்  மாணவர்களில் ஒருவரான 21 வயதுடைய  Muhamad Fathol  Harris  மரணம் அடைந்தார்.   மாலை மணி  5.20 அளவில் நிகழ்ந்த அந்த விபத்தில்  பேரா ,  பாகான் செராய்,  Sungai  Semambu -வைச் சேர்ந்த  அந்த மாணவர்  தலையில் கடுமையான காயம் அடைந்ததால்  விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்தார். அந்த விபத்தில்  காரை ஓட்டிச் சென்ற   பேரா, பாகான் செராயைச் சேர்ந்த 21  வயதுடைய  Ignatius Santhanasamy உட்பட மூன்று மாணவர்கள்  காயம் அடைந்தனர்.

அவர்கள்  அனைவரும்  Kemaman மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் செல்லப்பட்டனர்.   Ignatius Santanasamy  ஓட்டிய  Perodua Alza  கார்  கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததைத் தொடர்ந்து அதன் உள்ளே அமர்ந்திருந்த  இதர  மூன்று மாணவர்கள்    காரிலிருந்து வெளியே   விழுந்தனர்.     திரெங்கானு பல்கலைக்கழகத்தின்  இளங்கலை மாணவர்களான அந்த நால்வரும்   குவந்தானிலிருந்து    திரெங்கானு பல்கலைக்கழக   வளாகத்திற்கு சென்றபோது  விபத்திற்கு உள்ளாகினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!