Latestமலேசியா

MPV வாகன விற்பனை மோசடி; WhatsApp போலி விளம்பரத்தை நம்பி 17,220 ரிங்கிட்டை ஏமாந்த முதியவர்

சிபு, ஜூன்-19 – MPV வாகன விற்பனைத் தொடர்பில் WhatsApp-பில் வந்த போலி விளம்பரத்தை நம்பி, 17,220 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார் சரவாக்கைச் சேர்ந்த 70 வயது முதியவர்.

Sam Low என அடையாளம் கூறப்பட்ட சந்தேக நபர் கொடுத்த இரு உள்ளூர் வங்கிக் கணக்குகளில் அப்பணத்தைப் போட்டதாக, கப்பல் மெக்கானிக்கான அம்முதியவர் போலீசிடம் கூறினார்.

அந்த MPV வாகனத்தை 60,000 ரிங்கிட்டுக்கு விற்பதாகக் கூறிக்கொண்ட அவ்வாடவர், வேலையை சீக்கிரமாக முடிக்க முன்பணம் கேட்டுள்ளார்.

கார் குறைந்த விலையில் கிடைப்பதாக நினைத்த முதியவரும், கடந்த வாரம் 5 தடவையாக மொத்தம் 17,220 ரிங்கிட்டை வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்.

மீண்டும் 3,500 ரிங்கிட்டைப் போடுமாறு அந்நபர் கேட்டதால் சந்தேகப்பட்ட முதியவர், தாம் மோசடிக்கு ஆளாகியிருப்பதை உணர்ந்து போலீசில் புகார் செய்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!