கோலாலம்பூர், ஏப்ரல் 5 – வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக்கு மிகவும் பிரபலமான MR D.I.Y, தனது புதிய வளாகமான MR D.I.Y PLUS கடையின் வடிவமைப்பை சர்வதேச அமைப்பில் முத்தியார டாமான்சாரவில் உள்ள IPC பேரங்காடியில் திறந்துள்ளது.
துபாயில் அமைந்துள்ள Miracle Garden, துர்கியின் கப்படோசியாவில் உள்ள பிரபலமான ஹாட் ஏர் பலூன் மற்றும் மேற்கு ஆசியாவின் ஐடில்ஃபிட்ரி அலங்காரங்கள் என புகழ்பெற்ற அம்சங்களை முன்வைத்து, வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
23,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ள அந்த பேரங்காடியில், MR D.I.Y, MR Dollar, MR Toy மற்றும் EMTOP ஆகியவற்றின் தயாரிப்பு பொருட்கள் ஓரே கூரையின் கீழ் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்குவதற்கும், சுற்றுலா வருவதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும், உலகின் சில இடங்களின் அழகைக் காண்பிப்பதற்கும் ஒரு பிரம்பாண்டமான கடையை வடிவமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார், MR D.I.Y குழுமத்தின் தலைமை நிர்வாகி அட்ரியன் ஓங்.